கன்னியாகுமரி வர்த்தக துறைமுகத்துக்கு எதிர்ப்பு : மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் போராட்டம்
கன்னியாகுமரி வர்த்தக துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் திடீர் போராட்டம் நடந்தது.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) சுரேஷ் தலைமை தாங்கி, மீனவர்கள் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகளிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
கூட்டத்தில் மீன்வளத்துறை துணை இயக்குனர் லாமெக் ஜெயக்குமார், உதவி இயக்குனர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முதலில் கடந்த மாத கூட்டத்தில் மீனவர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்பிறகு மீனவர்கள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் கோரிக்கைகள், குறைகள் குறித்து பேசினர்.
அதன் விவரம் வருமாறு:-
கடந்த 2012-ம் ஆண்டு தூத்தூர் மண்டலம், இனயம் மண்டலப் பகுதிகளில் வீடுகள், சாலைகள், கடலரிப்பு தடுப்புச்சுவர் போன்றவை கடலரிப்பால் கடுமையாக சேதம் அடைந்தன. 6 ஆண்டுகள் கடந்த பின்னரும் அவற்றை சரிசெய்ய இன்னும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீனவ கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் மீனவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பாலான பணம் போக்குவரத்துக்காக செலவிட வேண்டியுள்ளது.
இதேபோல் சொத்தவிளை சாலையும் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. இதை சீரமைக்க ஒரு லட்ச ரூபாய் போதுமானதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு நிதி இல்லை என்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் இதற்கு நடவடிக்கை மேற்கொள்ளாவிடில் நாங்கள் மீனவ கிராமங்களில் உண்டியல் வைத்து வசூல் செய்து சாலையை சீரமைப்போம்.
கடலரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கும்போது சிறிய கற்களை கீழே போட்டு பெரிய கற்களை மேலே போடுகிறார்கள். இதனால் கடல்சீற்ற காலங்களில் கடலரிப்பு தடுப்புச்சுவர் சேதம் அடைகிறது.
நேற்று (அதாவது நேற்று முன்தினம்) கீழமணக்குடியை சேர்ந்த மீனவ பெண்கள் எனக்கூறி கன்னியாகுமரி வர்த்தக துறைமுகத்துக்கு ஆதரவு தெரிவித்து கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் அவர்களில் ஒருவர்கூட கீழமணக்குடியைச் சேர்ந்தவர்கள் இல்லை. எனவே போலியாக மனு கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். (அப்போது கூட்டத்துக்கு வந்திருந்த மீனவ கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் பலர் துறைமுகத்துக்கு ஆதரவு தெரிவித்து மனு கொடுத்த பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கூட்ட அரங்குக்குள்ளேயே கோஷங்களை எழுப்பினர். இதனால் சிறிது நேரம் கூச்சல்- குழப்பம் நிலவியது.
பின்னர் தொடர்ந்து பேசிய மீனவ பிரதிநிதிகள் மாதத்துக்கு ஒருமுறை நடைபெறும் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் துறைகளின் உயர் அதிகாரிகள் வந்து கலந்து கொள்வதில்லை. அவர்கள் கலந்து கொண்டால்தான் எங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும். எனவே இனி நடைபெறும் கூட்டங்களுக்கு மாவட்ட அளவிலான உயர் அதிகாரிகள் வந்து கலந்துகொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
மீனவர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து பேசிய மாவட்ட வருவாய் அதிகாரி சுரேஷ் கூறியதாவது:-
சேதமடைந்த சாலைகளை செப்பனிட கலெக்டரிடம் பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல் கடலரிப்பு தடுப்புச்சுவர்கள் சேதம் அடையாத வகையில் அமைக்கப்படும். சொத்தவிளை சாலையை சீரமைக்க தேவையான நடவடிக்கைள் எடுக்கப்படும். துறைமுகத்துக்கு ஆதரவு தெரிவித்து கலெக்டரிடம் மனு கொடுத்த பெண்கள் விவகாரம் குறித்து கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்று, விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அடுத்த கூட்டத்தில் துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் அதிகாரி சுரேஷ் பேசினார்.
கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது கன்னியாகுமரி வர்த்தக துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை தீர்மானமாக நிறைவேற்றி பதிவு செய்ய வேண்டும் என்று மீனவர்கள் தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகளிடம் இருந்து சரியான பதில் வராததால் மீனவர்கள் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் பலர் கூட்ட அரங்கை விட்டு வெளியே வந்து அந்த அரங்கின் வாசல் முன் அமர்ந்து திடீர் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் வர்த்தக துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், துறைமுகத்துக்கு ஆதரவு தெரிவித்து மனு கொடுத்த பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீண்டும் கூட்ட அரங்கினுள் சென்று அமர்ந்தனர். இதனால் போராட்டம் முடிவுக்கு வந்தது. கூட்டத்தில் மீனவ சங்க பிரதிநிதிகளான குறும்பனை பெர்லின், அருட்பணியாளர் சர்ச்சில், ஆல்பின், அந்தோணி, அலெக்சாண்டர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story