ஆண் குழந்தை இல்லாத ஆத்திரத்தில் பெண் உயிருடன் எரித்துக் கொலை


ஆண் குழந்தை இல்லாத ஆத்திரத்தில் பெண் உயிருடன் எரித்துக் கொலை
x
தினத்தந்தி 3 April 2018 8:45 PM GMT (Updated: 3 April 2018 8:45 PM GMT)

ஆண் குழந்தை இல்லாத ஆத்திரத்தில் பெண் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

பெங்களூரு,

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா கொப்பா கேட் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார்(வயது 34). இவருடைய மனைவி வீணா(27). இந்த தம்பதிக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு சஞ்சனா, ருஷிதா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தனக்கு பிறந்த 2 குழந்தைகளும், பெண் குழந்தைகளாக பிறந்ததால், ஆண் குழந்தை இல்லாததை கூறி சசிகுமார் தனது மனைவி வீணாவுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இதுதொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சசிகுமார், வீட்டில் இருந்த மண்எண்ணெயை வீணாவின் மீது ஊற்றி தீவைத்து விட்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த வீணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதையடுத்து சசிகுமார் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து அறிந்த ஜிகினி போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை வலைவீசி தேடி வருகின்றனர். ஆண் குழந்தை இல்லாததால் தனது மனைவியை கணவனே உயிருடன் எரித்துக் கொலை செய்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story