மலையில் இருந்து கீழே தள்ளி கர்ப்பிணி மனைவியை கொல்ல முயன்ற கணவர் கைது
கர்ப்பிணி மனைவியை மலையில் இருந்து கீழே தள்ளி கொல்ல முயன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். 80 அடி பள்ளத்தில் விழுந்த அந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
மும்பை,
மும்பை மந்திராலயாவில் டிரைவராக பணிபுரிந்து வருபவர் சுரேஷ் பவார். இவரது மனைவி விஜயா. 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். சம்பவத்தன்று சுரேஷ் பவார் தனது மனைவி விஜயாவை ராய்காட் மாவட்டம் மாத்தேரனுக்கு சுற்றுலா அழைத்து சென்றார். அங்கு பல இடங்களை சுற்றி பார்த்துவிட்டு மலை உச்சிக்கு விஜயாவை அழைத்து சென்றார்.
பின்னர் திடீரென மலை உச்சியில் நின்ற விஜயாவை பின்னால் இருந்த சுரேஷ் பவார் கீழே தள்ளிவிட்டார்.
இதில், விஜயா 80 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து அங்கிருந்த மரக்கிளையில் சிக்கிக்கொண்டார். அவரது அலறல் சத்தம்கேட்டு அங்கு வந்த மலைவாழ் மக்கள் உடனே விரைந்து சென்று விஜயாவை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், அவரது வயிற்றில் வளரும் கருவும் பாதிக்கப்படவில்லை எனவும் டாக்டர்கள் கூறினர். மேலும் அவர் அதிசயமாக உயிர் பிழைத்ததாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து ஆஸ்பத்திரிக்கு வந்த போலீசார் விஜயாவிடம் விசாரணை நடத்தினர். இதில், தனது கணவர் சுரேஷ் பவார் தான் தன்னை மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி கொல்ல முயன்றதாக புகார் அளித்தார்.
இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ் பவாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story