திருப்பூரில் ஓட்டை பிரித்து வீட்டுக்குள் புகுந்து 12 பவுன் நகை திருட்டு - மர்ம ஆசாமிகள் கைவரிசை


திருப்பூரில் ஓட்டை பிரித்து வீட்டுக்குள் புகுந்து 12 பவுன் நகை திருட்டு - மர்ம ஆசாமிகள் கைவரிசை
x
தினத்தந்தி 5 April 2018 10:45 PM GMT (Updated: 5 April 2018 7:58 PM GMT)

திருப்பூரில் ஓட்டை பிரித்து வீட்டுக்குள் புகுந்து 12 பவுன் நகையை திருடிச்சென்ற மர்மஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருப்பூர்,

திருப்பூர் கொங்கு மெயின்ரோடு வெங்கடாச்சலபதி பள்ளி ரோடு பகுதியை சேர்ந்தவர் ரேவதி(வயது 62) இவர் கடந்த 31-ந்தேதி தனது வீட்டை பூட்டி விட்டு கோவையில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார். பின்னர் அவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் ஓடு பிரிக்கப்பட்டிருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் வீட்டின் படுக்கையறையில் இருந்த பீரோ திறந்து கிடந்ததையும், அதில் இருந்த துணிகள் சிதறி கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும், பீரோவில் வைத்திருந்த 12 பவுன் நகையை காணவில்லை. மர்ம ஆசாமிகள் நகையை திருடி சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ரேவதி வெளியூர் சென்று இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் ரேவதி வீட்டிற்கு சென்று அவருடைய வீட்டின் ஓட்டை பிரித்து கீழே இறங்கியுள்ளனர்.

பின்னர் மெத்தையின் அடியில் வைத்திருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் இருந்த 12 பவுன் நகையை திருடிச் சென்று இருப்பது தெரிவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story