எடியூரப்பா ரூ.4 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார் காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பா.ஜனதா மறுப்பு


எடியூரப்பா ரூ.4 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார் காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பா.ஜனதா மறுப்பு
x
தினத்தந்தி 6 April 2018 9:53 PM GMT (Updated: 6 April 2018 9:53 PM GMT)

கர்நாடக பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா பத்ரா மேல் அணை திட்டத்தில் ரூ.4 கோடி லஞ்சம் வாங்கியதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

பெங்களூரு,

குற்றச்சாட்டை மறுத்து பா.ஜனதா ஒரு அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் கூறி இருப்பதாவது:-

பத்ரா மேல் அணை திட்டத்தில் எடியூரப்பா ரூ.4 கோடி லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இதே குற்றச்சாட்டு முன்பே கூறப்பட்டது. இது தொடர்பாக கோர்ட்டில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் நடந்த விசாரணையில், எந்த லஞ்சமும் கைமாறவில்லை என்று விசாரணை அமைப்பு அறிக்கையை தாக்கல் செய்தது.

இது தொடர்பாக எடியூரப்பா மீது லோக்அயுக்தா அமைப்பு வழக்கு பதிவு செய்தது. இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் எடியூரப்பா மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, அந்த வழக்கை ரத்து செய்து தீர்ப்பு கூறியது. வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கும், எடியூரப்பாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வருமான வரித்துறைக்கு தேவையான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Next Story