வாலிபருடன் இருப்பது போன்ற புகைப்படங்களை முகநூலில் வெளியிட்டதுடன் பெண்ணின் செல்போன் எண் ஆபாச இணையதளத்தில் பதிவு
வாலிபருடன் இருப்பது போன்ற புகைப்படங்களை முகநூலில் வெளியிட்டதுடன், பெண்ணின் செல்போன் எண்ணை ஆபாச இணையதளத்தில் பதிவு செய்த கணவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு,
வாலிபருடன் இருப்பது போன்ற புகைப்படங்களை முகநூலில் வெளியிட்டதுடன், பெண்ணின் செல்போன் எண்ணை ஆபாச இணையதளத்தில் பதிவு செய்த கணவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண்ணுக்கு தொல்லைபெங்களூருவில் 28 வயது மதிக்கத்தக்க பெண் வசித்து வருகிறார். அந்த பெண் ஒரு வாலிபருடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் முகநூல்(பேஸ்புக்) பக்கத்தில் இடம் பெற்றிருந்தது. மேலும் பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட சில நபர்கள், ஆபாச இணையதளத்தில் உங்களது செல்போன் எண் இருப்பதாகவும், உங்களுடன் விபசாரத்தில் ஈடுபட விருப்பமாக இருக்கிறது என்றும் கூறி தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதை கேட்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி பெங்களூரு சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கணவர் கைதுஇந்த நிலையில், பெண்ணின் செல்போன் எண்ணை ஆபாச இணையதளத்தில் பதிவு செய்ததாக கூறி, அவரது கணவரை கைது செய்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர், சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த வினய் என்று தெரியவந்தது. இவர், அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு பெங்களூருவில் வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் வினயும், அந்த பெண்ணும் சேர்ந்து வாழ பிடிக்காமல் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், தனது மனைவியை பழிவாங்குவதற்காக முகநூலில் போலி கணக்கை, வினய் தொடங்கியுள்ளார். அதில், வாலிபர் ஒருவருடன் மனைவி நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களை தானே உருவாக்கி வினய் பதிவு செய்துள்ளார். இதுதவிர ஆபாச இணையதளத்தில் மனைவியின் செல்போன் எண்ணை பதிவு செய்து, அவரை விபசாரத்திற்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் வினய் குறிப்பிட்டு இருந்ததும் தெரியவந்தது. கைதான வினய் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.