ஈரான் நாட்டில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்க வேண்டும் உறவினர்கள் கலெக்டரிடம் மனு
ஈரான் நாட்டில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தி உறவினர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி,
ஈரான் நாட்டில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தி உறவினர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
மீனவர்கள்தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன்பட்டினத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ், பெனிட்டோ, சுஜய், சேவியர், பெரியதாழையை சேர்ந்த விக்டர், பிரசாந்த், அஜில்டன் மற்றும் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என மொத்தம் 21 பேர் ஈரான் நாட்டுக்கு மீன்பிடி தொழில் செய்வதற்காக சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் நாகர்கோவிலை சேர்ந்த ஒரு தனியார் போக்குவரத்து நிறுவனம் மூலம் ஈரானுக்கு சென்றார்களாம்.
அங்கு நகில்டெகி என்ற இடத்தில் முகமது ஷாலா என்பவரின் விசைப்படகில் சென்று மீன்பிடி தொழில் செய்து வந்தார்களாம். அப்போது சரிவர சம்பளம் கொடுக்காமலும், உணவு கொடுக்காமலும் துன்புறுத்தப்பட்டு உள்ளனர். இதுபற்றி மீனவர்கள் விசைப்படகு உரிமையாளரிடம் கேட்டு உள்ளனர். இதனால் விசைப்படகு உரிமையாளர் 21 பேரையும் அவர்கள் தங்கி இருந்த இடத்தை விட்டு வெளியேற்றி விட்டாராம். இதனால் அவர்கள் உணவு இல்லாமல் ரோட்டோரத்தில் அவதிப்பட்டு வருவதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
மனுஇதைத்தொடர்ந்து வீரபாண்டியன்பட்டினம், பெரியதாழையை சேர்ந்த மீனவர்களின் உறவினர்கள் நேற்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் தனித்தனியாக கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஈரான் நாட்டில் சிக்கி தவிக்கும் தங்கள் உறவினர்கள் உள்பட 21 மீனவர்களையும் மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.