தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகனுக்கு முன்ஜாமீன் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
வடமதுரையில் வாகனத்துக்கு தீ வைத்த வழக்கில் வேல்முருகனுக்கு முன்ஜாமீன் அளித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு டாஸ்மாக் குடோனில் இருந்து டாஸ்மாக் கடைகளுக்கு வினியோகம் செய்வதற்காக ரூ.25 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் வாகனத்தில் கொண்டு சென்றபோது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அந்த வாகனத்துக்கு தீவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, தன் மீது வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்றும், தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன், மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story