அரசு புறம்போக்கு நிலத்தில் பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் விரட்டியடிப்பு கலெக்டரிடம் புகார் மனு


அரசு புறம்போக்கு நிலத்தில் பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் விரட்டியடிப்பு கலெக்டரிடம் புகார் மனு
x
தினத்தந்தி 1 July 2018 3:30 AM IST (Updated: 1 July 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட் தலைமையில் வானூர் தாலுகா அருவடை, எடைச்சேரி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனிடம் புகார் கொடுத்தனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சரவணன், பொருளாளர் கலியமூர்த்தி ஆகியோர் தலைமையில் வானூர் தாலுகா அருவடை, எடைச்சேரி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனிடம் ஒரு புகார் கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

நாங்கள் உப்புவேலூர், கழுவெளி பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் 40 ஆண்டுகளுக்குமேல் பயிர் சாகுபடி செய்து வருகின்றோம். எங்களுக்கு சொந்தமான நிலங்கள் வேறு ஏதும் இல்லை. பல ஆண்டுகாலமாக பயிர் செய்து வந்த இந்த நிலத்தை அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்ததோடு, அடியாட்களை வைத்துக்கொண்டு எங்களை கழுவெளி நிலங்களில் இருந்து விரட்டியடித்து வருகின்றார். அதுமட்டுமின்றி இந்த நிலங்களை தனிநபர்களுக்கு அவர் விற்பனை செய்து வருகின்றார். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


Next Story