மார்க்கர், பேனாவில் மறைத்து வைத்து தங்கம் கடத்தல்: மதுரை விமான நிலையத்தில் திருச்சியைச் சேர்ந்தவர் கைது


மார்க்கர், பேனாவில் மறைத்து வைத்து தங்கம் கடத்தல்: மதுரை விமான நிலையத்தில் திருச்சியைச் சேர்ந்தவர் கைது
x
தினத்தந்தி 22 July 2018 3:45 AM IST (Updated: 22 July 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

மதுரை விமான நிலையத்தில் ரூ.16½ லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பிடிபட்டது.

மதுரை,

கொழும்புவில் இருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி கொண்டு வருவதாக சுங்க புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சுங்க புலனாய்வுத்துறை உதவி கமி‌ஷனர் வெங்கடேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, திருச்சியைச் சேர்ந்த மகபூப் ஜான்(வயது 38) என்பவரின் உடமைகளை சோதனை செய்தபோது அவர் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மகப்பூப்ஜான் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து சுங்க புலனாய்வு துறை உதவி கமி‌ஷனர் வெங்கடேஷ்பாபு கூறுகையில், மகபூப் ஜானின் உடமைகளை சோதனை செய்தபோது, அதில் 3 மார்க்கர்கள், பேனா இருந்தன. மார்க்கர்களை திறந்து பார்த்தபோது அதில் உருளை வடிவிலான தங்கம் இருந்தது. இதுபோல் பேனாவிலும் கடத்தல் தங்கம் இருந்தது. அவை சுமார் 555 கிராம் எடை கொண்டிருந்தது. இதன் மதிப்பு ரூ.16 லட்சத்து 68 ஆயிரத்து ஆகும். அதனை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறோம்“ என்றார்.

இதுபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு துபாயில் இருந்து மார்கர், பென் ஆகியவற்றில் மறைத்து கடத்தி வரப்பட்ட 2 கிலோ 200 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story