கடன் அதிகமாக இருந்ததால் 5½ பவுன் நகைக்கு ஆசைப்பட்டு பெண் கொலை, போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்


கடன் அதிகமாக இருந்ததால் 5½ பவுன் நகைக்கு ஆசைப்பட்டு பெண் கொலை, போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 29 July 2018 5:45 AM IST (Updated: 29 July 2018 2:29 AM IST)
t-max-icont-min-icon

கடன் அதிகமாக இருந்ததால் 5½ பவுன் நகைக்கு ஆசைப்பட்டு கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்து உள்ளது.

ஈரோடு,

சென்னிமலை அருகே சேலையால் கழுத்தை இறுக்கி பெண் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்து உள்ளன. அதன் விவரம் வருமாறு:–

என்னிடம் ஆறுமுகம் ரூ.5 ஆயிரம் யாரிடமாவது கடன் வாங்கி தாருங்கள்? என்றார். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் தோப்புபாளையத்தில் இருக்கிறார். அவரிடம் பணம் வாங்கி தருகிறேன். உங்களுடைய மனைவி சிந்துவை என்னுடன் அனுப்பி வையுங்கள் என்றேன். என்னை நம்பிய அவர், சிந்துவை அவருடைய அலுவலகத்துக்கு சென்று அழைத்து செல்லுங்கள் என்றார். நானும் உடனே சிந்துவின் அலுவலகத்துக்கு சென்று அவரை மோட்டார்சைக்கிளில் அழைத்து கொண்டு சென்றேன். அப்போது அவர் கழுத்தில் 5½ பவுன் தாலி சங்கிலி அணிந்திருந்தார். சிந்துவை மோட்டார்சைக்கிளில் விஜயமங்கலம்– ஊத்துக்குளி ரோட்டில் உள்ள வனப்பகுதி போன்ற ஒரு இடத்துக்கு அழைத்து சென்றேன். அந்த பகுதி ஆள் நடமாட்டம் அறவே இல்லாத பகுதி ஆகும்.

வனப்பகுதிக்கு சென்றதும் மோட்டார்சைக்கிளை நிறுத்தினேன். அப்போது இங்கு ஏன் மோட்டார்சைக்கிளை நிறுத்துகிறாய்? என சிந்து என்னிடம் கேட்டார். நான் அவரிடம், எனக்கு கடன் அதிகமாக உள்ளது. எனவே நீங்கள் அணிந்திருக்கும் 5½ பவுன் நகையை கழற்றி தாருங்கள். நகையை அடகு வைத்து எனது கடன் முழுவதையும் அடைத்து விடுகிறேன். உங்களுக்கும் ரூ.5 ஆயிரம் தருகிறேன் என்றேன்.

இதனால் எங்கள் 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு ஏற்பட்டத்தில் ஆத்திரம் அடைந்து அவர் அணிந்திருந்த சேலையால் கழுத்தை இறுக்கி அவரை கொன்றேன்.

இதைத்தொடர்ந்து சிந்துவின் கழுத்தில் இருந்து 5½ பவுன் தங்க சங்கிலியை எடுத்து சென்றேன். பின்னர் அந்த நகையை ஒரு தனியார் நிறுவனத்தில் அடகு வைத்து நான் பிறருக்கு கொடுக்க வேண்டிய கடன்களை அடைத்தேன். மேலும் ரூ.5 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு ஆறுமுகம் வேலை செய்த தொழிற்சாலைக்கு சென்றேன். அங்கு அவரை சந்தித்து ரூ.5 ஆயிரத்தை கொடுத்தேன். அவரிடம் சிந்துவை அழைத்து சென்று தோப்புபாளையத்தில் உள்ள எனது நண்பரிடம் ரூ.5 ஆயிரம் வாங்கினேன். ஆனால் சிந்துவிடம் பணத்தை நான் கொடுக்கவில்லை. அவரை அங்கிருந்து பஸ்சில் அனுப்பிவிட்டு நேரில் வந்து உங்களிடம் கொடுக்கிறேன் என நாடகமாடினேன். அதை அவரும் உண்மை என நம்பி என்னிடம் இருந்து ரூ.5 ஆயிரத்தை வாங்கி கொண்டார்.

மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது. இந்த கொலையை தனசேகரன் மட்டுமே செய்தாரா? அல்லது அவருடன் வேறு யாருக்காவது இந்த கொலையில் தொடர்பு உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

‘சிந்துவின் சேலையை கழுத்தால் இறுக்கி கொன்ற தனசேகரன், அவர் அணிந்திருந்த 5½ பவுன் நகையை கழற்றினார். பின்னர் உடலை என்ன செய்யலாம் என்று அவர் யோசித்தார். அப்போது அந்த பகுதியில் ஏராளமான பாறாங்கற்கள் கிடந்தது. உடனே அவர் பாறாங்கற்களை எடுத்து உடலின் மீது வரிசையாக அடுக்கினார். இதில் உடல் முழுவதும் பாறாங்கற்கள் மூலம் மூடப்பட்டன,’ என்ற கொடூர தகவலும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தனசேகரனை போலீசார் சம்பவ இடத்துக்கு அழைத்து சென்று பிணத்தை காட்டும்படி கூறினர். அங்கு பாறாங்கற்கள் மூலம் மூடப்பட்டிருந்த சிந்துவின் உடல் இருந்த இடத்தை அவர் காட்டினார். உடனே பாறாங்கற்களை போலீசார் அப்புறப்படுத்தினர். அப்போது சிந்துவின் உடல் அங்கிருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சிந்துவின் உடலை கண்டதும் கணவர் ஆறுமுகம் மற்றும் அவருடைய உறவினர்கள் கதறி அழுதனர். இதைத்தொடர்ந்து சிந்துவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story