விருதுநகர் அருகே கண்மாயில் மண் அள்ளிய 3 பேர் கைது லாரி, ஜே.சி.பி. எந்திரம் பறிமுதல்


விருதுநகர் அருகே கண்மாயில் மண் அள்ளிய 3 பேர் கைது லாரி, ஜே.சி.பி. எந்திரம் பறிமுதல்
x
தினத்தந்தி 1 Aug 2018 3:00 AM IST (Updated: 1 Aug 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே கண்மாயில் மண் அள்ளிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள நாட்டார்மங்கலம் கண்மாயில் அனுமதியில்லாமல் கரம்பை மண் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அள்ளி லாரி மூலம் எடுத்துச்செல்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்த போது அங்கு ரோந்து சென்ற ஆமத்தூர் பயிற்சி போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கீதா லாரியையும் ஜே.சி.பி. எந்திரத்தையும் பறிமுதல் செய்தார்.

 லாரி, ஜே.சி.பி. எந்திர உரிமையாளர் வெள்ளூரை சேர்ந்த பெரிய மாரியப்பன் (வயது 57), லாரி டிரைவர் அம்மன் கோவில்பட்டியை சேர்ந்த பாண்டி(40), ஜே.சி.பி. டிரைவர் சேர்வைக்காரன் பட்டியை சேர்ந்த சுதீஷ்குமார்(20) ஆகிய 3 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தார். பறிமுதல் செய்யப்பட்ட லாரியும் ஜே.சி.பி. எந்திரமும் மேல் நடவடிக்கைக்காக சிவகாசி ஆர்.டி.ஓ.விடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story