தூத்துக்குடியில் வழிப்பறி கொள்ளையர்கள் 5 பேர் கைது 4 செல்போன்கள் மீட்பு
தூத்துக்குடியில் வழிப்பறி கொள்ளையர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள் மீட்கப்பட்டன.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் வழிப்பறி கொள்ளையர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள் மீட்கப்பட்டன.
வழிப்பறிவிருதுநகர் திருச்சுழியை சேர்ந்த கேசவன் மகன் தெய்வேந்திரகுமார் (வயது 19). இவர் தூத்துக்குடியில் தங்கியிருந்து போட்டித்தேர்வுக்கு படித்து வருகிறார். இவர் மீனாட்சிபுரம் ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள், தெய்வேந்திரகுமாரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இதேபோன்று அரவிந்த் ஆஸ்பத்திரி அருகே நடந்து சென்று சக்திகணேஷ் என்பவரிடம் இருந்து ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும், 3–வது ரெயில்வே கேட் அருகே ரமேஷ் என்பவரிடம் இருந்து ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும், சுரேஷ்குமார் என்பவரிடம் இருந்து ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும் மர்மநபர்கள் பறித்து சென்றனர்.
5 பேர் கைதுஇதுதொடர்பாக தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில், தூத்துக்குடி அழகேசபுரத்தை சேர்ந்த மகராஜன் மகன் அஜித்குமார் (21), கருப்பசாமி மகன் கலைச்செல்வன் (21), யாதவர் தெருவை சேர்ந்த சக்திவேல் மகன் தனசேகர் (22), போல்டன்புரத்தை சேர்ந்த ஜேசுராஜ் மகன் ஜெனிஸ்டன் (18), மணிநகரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சண்முகநாதன் (18) ஆகிய 5 பேரும் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 செல்போன்களும் மீட்கப்பட்டன.