மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் பயங்கரவாதிகள் பதுங்கல் - இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் குற்றச்சாட்டு + "||" + Terrorists hacked in Dindigul - Hindu Leader Rama Gopalan Accusation

திண்டுக்கல்லில் பயங்கரவாதிகள் பதுங்கல் - இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் குற்றச்சாட்டு

திண்டுக்கல்லில் பயங்கரவாதிகள் பதுங்கல் - இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் குற்றச்சாட்டு
திண்டுக்கல்லில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும், அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் பேசினார்.
திண்டுக்கல்,

இந்து முன்னணி சார்பில் திண்டுக்கல்லில் நேற்று விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. இதற்கு இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் தலைமை தாங்கி பேசியதாவது:-

திண்டுக்கல் மலைக் கோட்டையில் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. ஆனால், சாமி சிலைகள் இல்லை. இதேபோல் வேலூரில் கோவில் இருந்தும் சிலைகள் இல்லாமல் இருந்தது. இந்துக்கள் போராடி, மக்களுக்கு புரிய வைத்து கோவிலில் சிவ பெருமான் சிலையை பிரதிஷ்டை செய்தனர். அதே போன்று திண்டுக்கல் மலைக் கோட்டை கோவிலில் அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும். வேலூரை போன்று திண்டுக் கல்லிலும் முடியும்.


திண்டுக்கல் மலைக் கோட்டை கோவிலில் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடந்தால், ஊர் முன்னேற்றம் அடையும். இதற்கு தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப் படுகிறது. சில அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதித்து சதுர்த்தி விழாவை தடுக்க நினைக்கிறார்கள். தமிழகத்தில் 25 ஆயிரம் ஊர்களில் விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கிறது.

நாம் கட்டுப்பாடு, ஒழுக்கம், மகிழ்ச்சியோடு சதுர்த்தி விழாவை கொண்டாட வேண் டும். திண்டுக்கல்லில் பயங்கர வாதிகள் பதுங்கி இருக்கின்ற னர். மத்திய புலனாய்வு துறையினர், பயங்கரவாதி களை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். அனைத்து கிராமங்கள், வார்டுகளிலும் இந்து முன்னணி கிளையை உருவாக்கி மக்களுக்கு பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதைத் தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலத்தை, ராம கோபாலன் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். சரக்கு வாகனங்கள், டிராக்டர் களில் மொத்தம் 60 சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப் பட்டன. ஏ.எம்.சி.சாலை, ரத வீதிகள், மெயின்ரோடு வழி யாக கோட்டைகுளத்தை ஊர் வலம் சென்றடைந்தது. பின்னர் அங்கு பூஜைகள் செய்யப்பட்டு சிலைகள் கரைக்கப்பட்டன.

இதில் மாவட்ட பொதுச் செயலாளர் சங்கர்கணேஷ், செயலாளர்கள் சஞ்சீவிராஜ், ராஜா, துணைத்தலைவர்கள் ராஜேந்திரன், வினோத்ராஜ், நகர பொதுச்செயலாளர் சண்முகப்பிரியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி, போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டனர்.