சர்வதேச விமான நிலையத்தில் ரூ.2½ கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்


சர்வதேச விமான நிலையத்தில் ரூ.2½ கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 8 Oct 2018 4:30 AM IST (Updated: 8 Oct 2018 4:30 AM IST)
t-max-icont-min-icon

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.2½ கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கொரிய நாட்டை சேர்ந்த 6 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் ஹாங்காக்கில் இருந்து விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்பட உள்ளதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.

இதில் ஆசனவாயில் வைத்து தங்கம் கடத்தி வந்த 4 பேர், உடைமைகளில் மறைத்து தங்கம் கடத்தி வந்த 2 பேர் என மொத்தம் 6 பெண்கள் சிக்கினர்.

அதிகாரிகள் அவர்களிடம் இருந்து ரூ.2½ கோடி மதிப்பிலான 47 தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் அந்த 6 பெண்களையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கொரிய நாட்டை சேர்ந்த பார்க் மியுன்சுக், பார்க் யோன் சூன், கிம் கிவாங் சூ, சியோ ஜியாங் சன், சியோ ஜியாங் ஜா, ஹாம் தாகி என்பது தெரியவந்தது.

பிடிபட்ட பெண்கள் கொரியாவில் உள்ள இஞ்சியோனில் இருந்து ஹாங்காக் வழியாக விமானத்தில் மும்பைக்கு தங்க கட்டிகளை கடத்தி வந்துள்ளனர்.


Next Story