பட்டா மாறுதலுக்கு லஞ்சம்: கிராம நிர்வாக அதிகாரிக்கு 2 ஆண்டு ஜெயில்


பட்டா மாறுதலுக்கு லஞ்சம்: கிராம நிர்வாக அதிகாரிக்கு 2 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 15 Oct 2018 10:15 PM GMT (Updated: 15 Oct 2018 8:25 PM GMT)

மதுரை அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டணை விதிக்கப்பட்டது.

மதுரை,

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை அடுத்துள்ள அய்யனார்குளத்தைச் சேர்ந்தவர் மார்க்கண்டேயன். இவர் அப்பகுதியில் உள்ள தனது தந்தைக்குச் சொந்தமான நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய, கிராம நிர்வாக அதிகாரி ராமையாவிடம் விண்ணப்பித்தார். அவர் பட்டா மாறுதல் செய்து தர ரூ.2 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மார்க்கண்டேயன் இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் கொடுத்த ஆலோசனையின்பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை 11.3.2005 அன்று கிராம நிர்வாக அதிகாரி ராமையாவிடம் கொடுத்தார். அவர் அந்த பணத்தை வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரையில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. முடிவில், ராமையா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி செங்கமலச்செல்வன் நேற்று தீர்ப்பளித்தார்.


Next Story