தேனியில் இந்து எழுச்சி முன்னணியினர் மோட்டார் சைக்கிள் ஊர்வலம்


தேனியில் இந்து எழுச்சி முன்னணியினர் மோட்டார் சைக்கிள் ஊர்வலம்
x
தினத்தந்தி 4 Nov 2018 11:00 PM GMT (Updated: 4 Nov 2018 8:25 PM GMT)

தேனியில் இந்து எழுச்சி முன்னணியினர் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடத்தினர்.

தேனி,

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு ஆகம விதிகளுக்கு எதிராக உள்ளதாகவும், கோவில் புனிதத்தை காக்கும் வகையில் மத்திய அரசு உடனே தலையிட்டு அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்து எழுச்சி முன்னணி சார்பில் தேனியில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. தேனி பொம்மையகவுண்டன்பட்டி சாலைப்பிள்ளையார் கோவில் முன்பு தொடங்கிய ஊர்வலத்தை நிறுவன தலைவர் பொன்.ரவி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட தலைவர் ராமராஜ், மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

அய்யப்பன் படம், 18 படிகள் அமைத்து அலங்கரிக்கப்பட்ட வாகனம் முன்னே செல்ல மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்து ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, முத்துத்தேவன்பட்டி, வீரபாண்டி, வயல்பட்டி, சத்திரப்பட்டி, முல்லைநகர், அரண்மனைப்புதூர் வழியாக சென்று இறுதியில் தேனி பங்களாமேட்டில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் பலர் கலந்துகொண்டனர்.


Next Story