கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் - மத்திய குழுவிடம், விவசாயிகள், மீனவர்கள் வலியுறுத்தல்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய குழுவிடம், விவசாயிகள், மீனவர்கள் வலியுறுத்தினர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவிடம் மீனவர்கள், விவசாயிகள், விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டு மனு அளித்தனர்.
தஞ்சை மாவட்ட கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் சங்க தலைவர் கலைச்செல்வன்:- பாதிக்கப்பட்ட தென்னை சிறு, குறு விவசாயிகள் என்று பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். மரத்தை வெட்டி அகற்றுவதற்கு ஒரு மரத்திற்கு ரூ.1,500 இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட ஒரு மரத்துக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். மரங்களை தூளாக்கி உரமாக மாற்றுவதற்கான உபகரணங்களை அரசு வழங்க வேண்டும். அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்.
அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்:- புயல் தாக்குதலால் காவிரி டெல்டாவில் நெற்பயிர்கள் மகசூல் இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தென்னை மரங்கள் அடியோடு அழிந்து நாசமாகி விட்டது. குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் முற்றிலும் நாசமாகி விட்டது. மத்திய அரசு விவசாயத்தை பாதுகாக்க உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும். தமிழக அரசு கேட்கும் நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.
தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் துரைமாணிக்கம்:- கஜா புயலால் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தென்னை, வாழை, கரும்பு உள்ளிட்டவை 90 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே புயலால் பாதிக்கப்பட்டபகுதியை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் வழங்க வேண்டும்.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜீவகுமார்:- தமிழக அரசு கேட்டுள்ள நிவாரணத்தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட நெல் பயிர் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரமும், தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரமும், வாழை 1 ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். இறந்த மாடுகளுக்கு ரூ.50 ஆயிரமும், ஆடுகளுக்கு ரூ.8 ஆயிரமும் வழங்க வேண்டும்.
பொன்னவராயன்கோட்டையை சேர்ந்த விவசாயி வீரசேனன்:- தஞ்சை மாவட்டத்தில் 45 ஆயிரம் ஏக்கரில் தென்னை மரங்கள் சேதம் அடைந்து உள்ளன. ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் வருமானம் கிடைத்தது. தற்போது பாதிக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் 25 ஆண்டுகள் வரை வருமானம் தரக்கூடிய மரங்களாகும். எனவே அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானது அல்ல. இந்த நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் முபாரக்:- அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம் பகுதியில் மீனவர்கள் முற்றிலும் வாழ்க்கையை இழந்துள்ளனர். இந்த பகுதிகளில் மட்டும் படகுகள், வலைகள் என ரூ.125 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதே போல் தென்னை மரங்களும் முறிந்து விழுந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
பேராவூரணி எம்.எல்.ஏ. கோவிந்தராஜன்:- பேராவூரணி பகுதியில் வாழும் மக்கள் அனைவரின் வாழ்வாதாரத்தை புயல் அழித்து விட்டது. இந்த பகுதியில் உள்ள 20 ஊராட்சிகளில் தென்னை மரங்கள், தேக்கு மரங்கள் என அனைத்தும் அடியோடு நாசமாகி விட்டது. மீனவர்களின் படகுகள் சுக்குநூறாகி விட்டன. ஏராளமான வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. எனவே மத்திய அரசு, தமிழக அரசு கேட்டுள்ள நிவாரணத்தை வழங்கி மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதே போல் விவசாயிகள் மற்றும் மீனவர்களும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
நிவாரணத்திற்கு பதிலாக புதிய படகுகள் வழங்க வேண்டும் - மீனவர்கள் சங்கம் கோரிக்கை
தமிழ்நாடு விசைப்படகு மீனவர்கள் சங்க மாநில செயலாளர் தாஜூதீன் மத்திய குழுவிடம் கொடுத்த மனுவில், “கஜா புயலால் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் பகுதியில் மட்டும் 246 விசைப்படகுகள், 832 நாட்டுப்படகுகள் என மொத்தம் 1,078 படகுகள் சேதம் அடைந்துள்ளன. இது தீவிர 1,428 வலைகள், 1,140 என்ஜின்கள், 47 கட்டுமரங்களும் என மொத்தம் ரூ.72 கோடியே 44 லட்சத்து 50 ஆயிரம் அளவுக்கு சேதம் அடைந்துள்ளன. இழந்த விசைப்படகுகளுக்கு பதிலாக புதிய இரும்பு படகுகள் வழங்க வேண்டும்”என்றார்.
விசைப்படகு மீனவர் சங்கத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் கூறுகையில், “பாதிக்கப்பட்ட மீனவர்கள் அனைவருக்கும் நிவாரணமாக பணம் வழங்குவதை விட, அதற்கு பதிலாக புதிய படகுகள் வழங்க வேண்டும். அப்போதுதான் எங்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும்”என்றார்.

Related Tags :
Next Story