பாகூர் அருகே வாகன சோதனை: காரில் கடத்திய சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் டிரைவர் கைது


பாகூர் அருகே வாகன சோதனை: காரில் கடத்திய சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் டிரைவர் கைது
x
தினத்தந்தி 31 March 2019 4:25 AM IST (Updated: 31 March 2019 4:25 AM IST)
t-max-icont-min-icon

பாகூர் அருகே காரில் கடத்திய சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

பாகூர்,

புதுச்சேரி மாநிலம் பாகூர் அடுத்துள்ள இருளஞ்சந்தை கிராமத்தில், பாகூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சிவக்குமார், மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கரையாம்புத்து£ரில் இருந்து கடலு£ர் நோக்கி ஒரு சொகுசு கார் வேகமாக சென்றது. அதனை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால், கார் நிற்காமல் அதிவேகமாக சென்றது.

உடனே, போலீசார் அந்த காரை பின் தொடர்ந்து விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.காரை சோதனை செய்தபோது, 23 மூட்டைகளில் தலா 200 வீதம் மொத்தம் 4600 பாக்கெட்டுகளில் சாராயம் கடலு£ர் பகுதிக்கு கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. தப்பியோட முயன்ற கார் டிரைவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், கிருமாம்பாக்கம் அடுத்துள்ள வம்பாபேட் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் (வயது29) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, ராஜேஷ்குமாரை கைது செய்த போலீசார், சாராய பாக்கெட்டுகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கார் டிரைவர் ராஜேஷ்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்தின் மதிப்பு சுமார் ரூ.30 ஆயிரம் ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்தை போலீசார், கலால் துறையிடம் ஒப்படைத்தனர். சாராயத்தை பறிமுதல் செய்த பாகூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சிவக்குமார், போலீசார் முரளி, ஜெயகோபால் ஆகியோரை தெற்கு போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகீம், இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ் ஆகியோர் பாராட்டினர்.


Next Story