கோவில் திருவிழா கொண்டாடுவதில் பிரச்சினை: போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை
கோவில் திருவிழா கொண்டாடுவதில் ஏற்பட்ட பிரச்சினையில், போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சின்னாளபட்டி,
சின்னாளபட்டி மேட்டுப்பட்டி பகுதியில் சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. அனைத்து சமுதாயங்கள் சார்பாக ஆண்டுதோறும் இந்த கோவிலில் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றபோது, கிராம மக்கள் ஒரு தரப்பாக பிரிந்து விழா நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் தாங்களே விழா நடத்த போவதாக தெரிவித்தனர். இதற்கு மற்றொரு தப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சித்திரை திருவிழா கொண்டாடுவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இதனிடையே நேற்று மதுரையில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்ததையொட்டி சின்னாளபட்டி சுந்தரராஜ பெருமாள் கோவிலிலும் திருவிழா கொடியேற்ற ஒரு தரப்பினர் கோவிலுக்கு சென்றனர். ஆனால் கோவில் பூட்டப்பட்டு இருந்ததால், கோவிலின் மற்றொரு வழியாக சென்று சித்திரை திருவிழா கொடியேற்றினர்.
இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை உருவானது. பின்னர் ஒரு தரப்பினர் திருவிழா கொடியேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்களின் மற்றொரு தரப்பினர் சின்னாளபட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். உடனே அவர்களுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து கலைந்து சென்ற அவர்கள், விழா நடத்த அனுமதி வழங்கியதாக கூறி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் சின்னாளபட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து சித்திரை திருவிழா கொடியேற்றப்பட்ட சுந்தரராஜ பெருமாள் கோவில் பூட்டப்பட்டது. திண்டுக்கல் புறநகர் போலீஸ் சூப்பிரண்டு வினோத் நேரில் பார்வையிட்டார். பின்னர் கோவிலை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இதனிடையே ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பிரபா தலைமையில் இரு தரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடி ஏற்படவில்லை. இதனால் கோவில் திருவிழா கொண்டாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Tags :
Next Story