தோட்டக்கலைத்துறை மூலமாக பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தகவல்


தோட்டக்கலைத்துறை மூலமாக பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தகவல்
x
தினத்தந்தி 27 July 2019 5:00 AM IST (Updated: 27 July 2019 4:15 AM IST)
t-max-icont-min-icon

தோட்டக்கலைத்துறை மூலமாக பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் காரீப் காலத்தில் மஞ்சள், மரவள்ளி, மா, வாழை, வெங்காயம், தக்காளி ஆகிய பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு செய்யப்பட்ட வட்டாரங்கள், கிராமங்களில் சாகுபடி செய்துள்ள மஞ்சள், வாழை, மா, மரவள்ளி, வெங்காயம் பயிர்களுக்கு காப்பீடு செய்ய வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி கடைசி நாளாகும். தக்காளி பயிருக்கு காப்பீடு செய்ய அடுத்த மாதம்(ஆகஸ்டு) 31-ந் தேதி கடைசிநாளாகும்.

மஞ்சள் பயிருக்கு காப்பீடு செய்ய பிரீமியத்தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.3,685-ம், ஒரு ஹெக்டேருக்கு ரூ.9,702-ம் ஆகும். வாழை பயிருக்கு காப்பீடு செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.4,070-ம், ஒரு ஹெக்டேருக்கு ரூ.10,053-ம் பிரீமியத்தொகையாகும். வெங்காயம் பயிருக்கு காப்பீடு செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.1,920-ம், ஒரு ஹெக்டேருக்கு ரூ.4,742-ம் பிரீமியத்தொகையாகும்.

மரவள்ளி பயிருக்கு காப்பீடு செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.1,510-ம், ஒரு ஹெக்டேருக்கு ரூ.3,730-ம் பிரீமியத்தொகையாகும். தக்காளி பயிருக்கு காப்பீடு செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.1,350-ம், ஒரு ஹெக்டேருக்கு ரூ.3,335-ம் பிரீமியத்தொகையாகும். மா பயிருக்கு காப்பீடு செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.1,025-ம், ஒரு ஹெக்டேருக்கு ரூ.2,532-ம் பிரீமியத்தொகையாகும். மா, வாழை, மஞ்சள், மரவள்ளி, வெங்காயம் மற்றும் தக்காளி பயிர் செய்துள்ள அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Next Story