திருச்சி விமான நிலையத்தில் ரூ.22¼ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.22¼ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் பெண்கள் உள்பட 3 பேர் சிக்கினர்.
செம்பட்டு,
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து நேற்று காலை தனியார் விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்னையை சேர்ந்த பாண்டிகுமார் என்பவர் உடலில் மறைத்து 200 கிராம் எடைகொண்ட தங்க சங்கிலிகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தங்க சங்கிலிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அதே விமானத்தில் வந்த விழுப்புரத்தை சேர்ந்த பாரிஸ் என்ற பெண், தனது உடைமையில் மறைத்து கடத்தி வந்த 235 கிராம் தங்கத்தையும், சென்னையை சேர்ந்த நசீமா கடத்தி வந்த 172 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.22 லட்சத்து 31 ஆயிரம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 2 பெண்கள் உள்பட 3 பேரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story