மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை கிரு‌‌ஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு


மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை கிரு‌‌ஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 27 Feb 2020 11:30 PM GMT (Updated: 27 Feb 2020 5:42 PM GMT)

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை வெட்டிக் கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கிரு‌‌ஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா மலசோனை கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 60). தொழிலாளி. இவரது மனைவி சாவித்திரியம்மா (45). கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.

மேலும் நாகராஜ் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். கடந்த 31.1.2018 அன்று கணவன் - மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த நாகராஜ், மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார்.

ஆயுள் தண்டனை

இந்த கொலை தொடர்பாக நாகராஜின் மகன் மாரப்பா (22) தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்தார். இந்த வழக்கு கிரு‌‌ஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட நாகராஜூக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜர் ஆகி வாதாடினார்.

Next Story