மாவட்ட செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.36½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் + "||" + Gold worth Rs 36 lakh seized at Trichy airport

திருச்சி விமான நிலையத்தில் ரூ.36½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.36½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.36½ லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில் சிக்கிய புதுக்கோட்டையை சேர்ந்தவர் உள்பட 2 பயணிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செம்பட்டு,

துபாயில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஏர் இந்தியா விமானம் திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது திருச்சியை சேர்ந்த சங்கர்(வயது 34) என்பவர் பசை வடிவில் தனது உடலில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து 376 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன் மதிப்பு ரூ.16 லட்சத்து 57 ஆயிரம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


ரூ.36 லட்சத்து 41 ஆயிரம்

இதேபோல் நேற்று முன்தினம் இரவு சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானம் திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த சதீஷ்(45) என்ற பயணி தனது உடலில் பசை வடிவில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து 450 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.19 லட்சத்து 84 ஆயிரம் ஆகும்.

இதன்படி நேற்று முன்தினம் இரவு திருச்சி விமான நிலையத்தில் 2 பயணிகளிடம் மொத்தம் ரூ.36 லட்சத்து 41 ஆயிரம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கிருஷ்ணகிரி வழியாக சேலத்திற்கு மினி லாரியில் கடத்திய ரூ.6 லட்சம் குட்கா பறிமுதல்
கர்நாடக மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக சேலத்திற்கு காய்கறி ஏற்றி சென்ற மினிலாரியில் கடத்திய ரூ.6 லட்சம் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2. சேலத்தில் 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: மாவு மில் தொழிலாளி கைது
சேலத்தில் 400 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக மாவு மில் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
3. மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்ததால் தடுப்பு கம்பியை தலையால் முட்டித்தள்ளிய வாலிபர்
தேனியில் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்த விரக்தியில், சாலையில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்பு கம்பியை வாலிபர் ஒருவர் தலையால் முட்டித் தள்ளினார். இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
4. பிறமாநிலங்கள் சென்று வேலூர் திரும்பும் டிரைவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு மறுத்தால் வாகனங்கள் பறிமுதல்
பிறமாநிலங்களுக்கு சென்று வேலூர் திரும்பும் டிரைவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு மறுத்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5. அனுமதி இல்லாமல் விற்பனை: திண்டுக்கல்லில் 600 கிலோ இறைச்சி பறிமுதல்
திண்டுக்கல்லில் அனுமதி இல்லாமல் விற்பனைக்கு வைத்து இருந்த 600 கிலோ இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.