மத்திய பிரதேசத்தில் இருந்து ஈரோட்டுக்கு 1,950 டன் கோதுமை ரெயிலில் வந்தது
மத்திய பிரதேசத்தில் இருந்து ஈரோட்டுக்கு 1,950 டன் கோதுமை ரெயிலில் வந்தது.
ஈரோடு,
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், ரெயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் உணவு பொருட்கள், மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்காக சரக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டத்துக்கு தேவையான அரிசி, கோதுமை, மக்காச்சோளம் உள்ளிட்ட பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் சார்பில் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது. இந்த கோதுமை சரக்கு ரெயிலில் ஏற்றி ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 1,950 டன் கோதுமை மூட்டைகள் 31 பெட்டிகள் அடங்கிய சரக்கு ரெயிலில் ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஈரோடு ரெயில்வே கூட்ஸ் செட்டில் இருந்து லாரிகளில் ஏற்றி கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று காலை நடந்தது. தொழிலாளர்கள் கோதுமை மூட்டைகளை ரெயில் பெட்டிகளில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றினார்கள். பின்னர் இந்த கோதுமை மூட்டைகள் பெருந்துறையில் உள்ள ஒரு கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story