கோவில்பட்டி பகுதியில் 720 ஏழைகளுக்கு நிவாரண பொருட்கள் - கனிமொழி எம்.பி. வழங்கினார்


கோவில்பட்டி பகுதியில் 720 ஏழைகளுக்கு நிவாரண பொருட்கள் - கனிமொழி எம்.பி. வழங்கினார்
x
தினத்தந்தி 19 May 2020 10:45 PM GMT (Updated: 19 May 2020 8:33 PM GMT)

கோவில்பட்டி பகுதியில் 720 ஏழைகளுக்கு நிவாரண பொருட்களை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

கோவில்பட்டி, 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால், பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண பொருட்களை வழங்கி உதவி வருகின்றனர்.

கோவில்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் முருகேசன் ஏற்பாட்டில், கோவில்பட்டி விசுவநாததாஸ் நகரில் முடி திருத்தும் தொழிலாளர்கள் உள்ளிட்ட 100 ஏழைகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

பின்னர் அவர், கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் தி.மு.க. நகர செயலாளர் கருணாநிதி ஏற்பாட்டில், முடி திருத்தும் தொழிலாளர்கள், திருநங்கைகள், சமையல் கலைஞர்கள் உள்ளிட்ட 320 ஏழைகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். தொடர்ந்து வில்லிசேரியில் ஒன்றிய செயலாளர் முருகேசன் ஏற்பாட்டில், 300 ஏழைகளுக்கு நிவாரண பொருட்களை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story