தொழிலாளி கொலையில் கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது; கள்ளக்காதல் விவகாரத்தில் கொன்றது அம்பலம்


தொழிலாளி கொலையில் கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது; கள்ளக்காதல் விவகாரத்தில் கொன்றது அம்பலம்
x
தினத்தந்தி 3 July 2020 5:12 AM IST (Updated: 3 July 2020 5:12 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் ஆட்டோவில் கழுத்தை அறுத்து தொழிலாளி கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டது தெரிந்தது.

திருவொற்றியூர்,

சென்னை புதுவண்ணாரப்பேட்டை ஜீவா நகரைச் சேர்ந்தவர் ராஜா (வயது 45). மனைவியை பிரிந்த இவர், திருவொற்றியூர் மாட்டு மந்தை மேம்பாலத்தின் கீழ் தங்குவது வழக்கம். பூச்சி மருந்து அடிக்கும் கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இவர், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் அருகில் கழுத்து அறுபட்டநிலையில் ஆட்டோவில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் தனிப்படை அமைத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அதே பகுதியில் நடைபாதையில் வசித்து வரும் அப்துல் கபீர் (37), அவருடைய மனைவி சாகிதா (27), நண்பர் கலிமுல்லா(48) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்தனர்.

சாகிதாவுக்கும், ராஜாவுக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. அப்துல் கபீரின் நண்பர் கலிமுல்லாவுக்கும் சாகிதா மேல் ஒரு கண் இருந்துள்ளது. ராஜா அடிக்கடி சாகிதாவுடன் கொஞ்சி பேசுவதை பார்த்து ஆத்திரத்தில் இருந்தார். இவர்கள் அனைவரும் மாட்டு மந்தை மேம்பாலத்தின் கீழேயே தங்கி உள்ளனர்.

அப்போது அடிக்கடி சாகிதாவும், ராஜாவும் தனிமையில் இருப்பது குறித்து அப்துல் கபீர் தனது நண்பரான கலிமுல்லாவிடம் கூறினார். ராஜா அடிக்கடி சாகிதாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் 3 பேரும் ராஜா மீது வெறுப்பில் இருந்தனர். நேற்று முன்தினம் ராஜா, சாகிதாவை கட்டாயப்படுத்தி தனிமையில் இருப்பதற்காக அருகில் உள்ள ஆட்டோவுக்கு அழைத்து சென்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்துல்கபீர், கலி முல்லா இருவரும் ராஜாவை சிறிய கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததும், இந்த கொலைக்கு உடந்தையாக சாகிதா இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. கைதான 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story