ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 68 பேருக்கு கொரோனா; 2 பேர் பலி


ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 68 பேருக்கு கொரோனா; 2 பேர் பலி
x
தினத்தந்தி 8 Aug 2020 11:22 AM IST (Updated: 8 Aug 2020 11:22 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நேற்று 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,503 ஆக இருந்தது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் மொத்தம் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,546 ஆக உயர்ந்துள்ளது.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 38 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா சிகிச்சை முடிந்து 3,081 பேர் வீடு திரும்பி உள்ளனர். கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் 137 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் பூரண குணமடைந்த 25 பேர் வீடு திரும்பினர்.

சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த 52 வயது ஆண், காரைக்குடியை சேர்ந்த 73 வயது முதியவர் ஆகிய 2 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Next Story