விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2 லட்சத்து 1,376 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 14,635 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 2,846 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. 13,045 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். ஒரு சிறப்பு தனிமைப்படுத்தும் மையத்தில் 22 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 155 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
42 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த 47 வயது நபர், 35 வயது நபர், லட்சுமிநகரை சேர்ந்த 31 வயது நபர், 51 வயது பெண், 5 வயது சிறுமி, சிவகாசி முத்துராமலிங்ககாலனியை சேர்ந்த 55 வயது நபர் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அருப்புக்கோட்டையை சேர்ந்த 2 பேர், கோவிந்தநல்லூரை சேர்ந்த 2 பேர், கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த 3 பேர், கல்குறிச்சி, புல்வாய்க்கரை, போதம்பட்டி, ரெட்டியபட்டி, வேடநத்தம், மல்லாங்கிணறு, காரியாபட்டி தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் 37, 33, 57 வயது நபர்கள், பாலவநத்தம், முத்துக்குமாரபுரம், மேலப்பருத்தியூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உயர்வு
இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,677 ஆக உயர்ந்துள்ளது. 1,429 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 20 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 902 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 19 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பாதிப்பு சதவீதம் வெகுவாக குறைந்துள்ள நிலையில் மருத்துவ பரிசோதனைகளும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
கிராமப்பகுதிகளில் மருத்துவ பரிசோதனைகள் இன்னும் அதிகரிக்கப்படுவதோடு பாதிப்பு ஏற்பட்ட கிராமப்பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story