ஸ்ரீபெரும்புதூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை


ஸ்ரீபெரும்புதூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 23 Oct 2020 11:06 PM GMT (Updated: 23 Oct 2020 11:06 PM GMT)

ஸ்ரீபெரும்புதூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த பிச்சிவாக்கம் அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் அன்பு (வயது 34). இவர் திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று காலை அன்பு தனது மனைவி செல்வி மற்றும் 2 குழந்தைகளுடன் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வீட்டை பூட்டி விட்டு சென்றார்.

நிகழ்ச்சி முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நகை கொள்ளை

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது யாரோ மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 15 பவுன் தங்கநகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அன்பு சுங்குவார் சத்திரம் போலீசில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்து வருகின்றனர். தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Next Story