திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு கொரோனா


திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 2 Feb 2021 7:04 PM GMT (Updated: 2 Feb 2021 7:04 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில்
மேலும் 24 பேருக்கு கொரோனா
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் தற்போது மேல் சிகிச்சைக்காக திருப்பூர் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 943 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 221 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 24 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனாவுக்கு 210 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை மாவட்டத்தில் 17 ஆயிரத்து 512 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Next Story