வாகன சோதனையில் 78 ஆரணி பட்டு புடவைகள் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி


வாகன சோதனையில் 78 ஆரணி பட்டு புடவைகள் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி
x
தினத்தந்தி 16 March 2021 5:31 AM IST (Updated: 16 March 2021 5:31 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த 78 ஆரணி பட்டு புடவைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

வாகன சோதனை

சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் நன்னடத்தை விதிகளின் கீழ் தேர்தல் பறக்கும் படையினர் காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், காஞ்சீபுரம் அடுத்த செவிலிமேடு சந்திப்பில் தோட்டக்கலை துறை அலுவலர் கோமதி தலைமையிலான பறக்கும்படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

பட்டு புடவைகள் பறிமுதல்

அப்போது ஆரணியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களை நிறுத்தி சோதனையிட்டதில், அவர்களிடம் 78 ஆரணி பட்டு புடவைகள் இருந்தது தெரியவந்தது. அதற்குரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாதததும் தெரியவந்தது.

இதனையடுத்து பட்டுப்புடவைகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், வருவாய் கோட்டாட்சியர் பெ.ராஜலட்சுமியிடம் ஒப்படைத்தனர். பட்டுபுடவைகளின் மதிப்பு சுமார் ரூ.46 ஆயிரத்து 800 என கணக்கிடப்பட்டுள்ளது.

 


Next Story