கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம்; தனியார் ஆஸ்பத்திரிகள் மீது நடவடிக்கை; தானே மாநகராட்சி கமிஷனருக்கு, மேயர் கோரிக்கை
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளிடம் இருந்து அதிக கட்டணம் வசூலித்து வருவதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தது.
இந்தநிலையில் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு தானே மாநகராட்சி மேயர் நரேஷ் மஸ்கே, மாநகராட்சி கமிஷனர் விபின் சர்மாவிற்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.அந்த கடிதத்தில் அவர், "கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கி உள்ள நிலையில், சில தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளுக்கு தேவையில்லாத பரிசோதனைகள் நடத்தி அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.
இதனை தனியார் ஆஸ்பத்திரிகளில் தணிக்கை செய்வதன் மூலம் கண்டறிய முடியும். மேலும் இதில் குற்றம் கண்டறியப்பட்டால் தனியார் ஆஸ்பத்திரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு கட்டணம் வசூலிக்க மாநில அரசு கட்டண வரைமுறையை நிர்ணயித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story