கொரோனா அச்சம் காரணமாக ஆவடி போலீஸ் நிலையத்தில் மரத்தடியில் விசாரணை
கொரோனா 2-வது அலை காரணமாக சென்னை மாநகர போலீசில் பலர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில் சிலர் உயிரிழந்து உள்ளனர். இதனால் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் பொதுமக்களை உள்ளே வரவழைத்து விசாரிக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் நிலைய நுழைவு வாயிலில் அமர்ந்து புகார்களை பெற்று போலீசார் விசாரிக்கின்றனர்.
அதன்படி கொரோனா அச்சத்தால் ஆவடி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சோனைராஜன், போலீஸ் நிலையத்தின் வெளியே உள்ள மரத்தின் கீழ் மேசை, நாற்காலி போட்டு அமர்ந்து பொதுமக்களிடம் புகார்களை பெற்று விசாரணை செய்து வருகிறார்.
Related Tags :
Next Story