பூதலூர், திருவையாறு பகுதியில் 59 பேருக்கு கொரோனா
பூதலூர், திருவையாறு பகுதியில் நேற்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருக்காட்டுப்பள்ளி,
பூதலூர் வட்டாரத்தில் நேற்று ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதில் சோளகம்பட்டி ஊராட்சியில் மட்டும் 17 பேருக்கும், பூதலூர் ஊராட்சியில் 5 பேருக்கும் பாதிப்பு உறுதியாகி உள்ளது.
கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த் துறை, சுகாதாரத் துறையினர் நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டனர். தொற்று உறுதியான 30 பேரில் 27 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். செங்கிப்பட்டியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 10 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. 131 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
திருவையாறு
திருவையாறு பேரூராட்சி பகுதியில் 9 பேர், குழிமாத்தூரில் ஒருவர், வைத்தியநாதன்பேட்டையில் 2 பேர், திருச்சோற்றுத்துறையில் 4 பேர் உள்பட 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
நோய் தொற்று கண்டறியப்பட்ட இடங்களில் திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், ஒன்றிய ஆணையர்கள், கணேசன், நந்தினி உள்ளிட்டோர் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை முடுக்கி விட்டனர்.

Related Tags :
Next Story