நெம்மேலி கடல்நீரை குடிநீராக சுத்திகரிக்கும் ஆலையில் பணியாளர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று


நெம்மேலி கடல்நீரை குடிநீராக சுத்திகரிக்கும் ஆலையில் பணியாளர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 30 May 2021 4:07 AM GMT (Updated: 30 May 2021 4:07 AM GMT)

நெம்மேலி கடல்நீரை குடிநீராக சுத்திகரிக்கும் ஆலையில் பணியாளர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக சுத்திகரிக்கும் ஆலையில் நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு தென் சென்னை பகுதியில் உள்ள ஈஞ்சம்பாக்கம், பெருங்குடி, அடையார், திருவான்மியூர், சோழிங்கநல்லூர், மயிலாப்பூர், கந்தன்சாவடி, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. குடிநீர் ஆலையில் பணிபுரிந்த ஒப்பந்த பணியாளர்கள் 10 பேருக்கு ஒரே நேரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் காட்டங்கொளத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில்் உள்ள கொரோனா வார்டில் அனுமதிப்பட்டுள்ளனர்.

Next Story