உத்தரபிரதேசம்: பேருந்து மீது வேன் மோதி பயங்கர விபத்து - 10 பேர் உயிரிழப்பு
உத்தரபிரதேசத்தில் பேருந்து மீது வேன் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
புலந்த்ஷாஹர்,
உத்தரபிரதேசம் மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் பேருந்து மீது வேன் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக சேலம்பூர் பகுதியில் புடான்-மீரட் மாநில நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி எதிரில் வந்த பேருந்து மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 27 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த சம்பவம் குறித்து அறிந்ததாகவும், காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் மாவட்ட நீதிபதி சந்திர பிரகாஷ் சிங் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story