கொலம்பியாவில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி


கொலம்பியாவில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி
x

கொலம்பியாவில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 10 பேர் பலியகினர்.

பகோட்டோ,

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்வதற்காக சுமார் 50 பேர் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். பிளேயன் நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 30 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்களை மீட்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story