டெல்லியில் தசரா விழாவில் 10-ம் வகுப்பு மாணவர் குத்திக்கொலை


டெல்லியில் தசரா விழாவில் 10-ம் வகுப்பு மாணவர் குத்திக்கொலை
x

டெல்லியில் தசரா விழாவில் 10-ம் வகுப்பு மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள கோல் மார்க்கெட் சஞ்சய் பஸ்தியில் தசரா விழா கொண்டாட்டம் இரவில் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது ஆர்யன் (வயது 17) என்ற 10-ம் வகுப்பு மாணவருடன் 5 பேர் கொண்ட கும்பல் திடீரென மோதியது. இதில் ஆர்யன் கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்த மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஒரு சிறுமியுடன் ஆர்யன் பேசியது பிடிக்காமல் அந்த கும்பல் அவரை கொலை செய்தது தெரியவந்தது.


1 More update

Next Story