டெல்லியில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் உயிரிழப்பு


டெல்லியில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் உயிரிழப்பு
x

கோப்புப்படம் 

காயமடைந்த மற்றொரு குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுடெல்லி,

தென்கிழக்கு டெல்லியின் ஜெய்த்பூர் பகுதியில் நேற்று மாலை பழைய சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் மூன்று குழந்தைகள் காயமடைந்தனர். இதையடுத்து, உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்றொரு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.


Next Story