தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேருக்கு பத்மஸ்ரீ விருது - பாம்பு பிடிக்கும் இருளர் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள்...!


தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேருக்கு பத்மஸ்ரீ விருது - பாம்பு பிடிக்கும் இருளர் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள்...!
x

தமிழ்நாட்டை சேர்ந்த பாம்பு பிடிக்கும் இருளர் பழங்குடியினத்தை சேர்ந்த 2 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி,

இந்தியாவின் 74வது குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாளை குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், தமிழ்நாட்டை சேர்ந்த பாம்பு பிடிக்கும் வீரர்களான இருளர் பழங்குடியினத்தை சேர்ந்த 2 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பாம்பு பிடிக்கும் வீரர்களான இருளர் பழங்குடியின சமுகத்தை சேர்ந்த வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story