17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: ஆந்திர வாலிபருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை

17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: ஆந்திர வாலிபருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை
x

17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆந்திர வாலிபருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கோலார் மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கோலார் தங்கவயல்:

17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆந்திர வாலிபருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கோலார் மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

17 வயது சிறுமி

கோலார் மாவட்டம் பங்காருபேட்டையை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரை கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ந் தேதி ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்த வினோத் குமார்(வயது 23) என்பவர் தைல தோப்புக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தன்னுடைய பெற்றோரிடம் கூறினார். உடனே சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து பங்காருபேட்டை போலீசில் புகார் அளித்தனர்.

20 ஆண்டு சிறைத்தண்டனை

அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் வினோத் குமாரை கைது செய்தனர். பின்னர் கோலார் மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி தேவமானே நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார்.

அவர், வழக்கில் குற்றவாளியான வினோத் குமாருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குற்றவாளி ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் வினோத்குமாரை பிடித்து சிறையில் அடைத்தனர்.

Next Story