எல்லை தாண்டி அட்டூழியம்: பாகிஸ்தான் துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் பலி

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள மன்கோட்–பால்நோய் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று எல்லை தாண்டி துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டது.
ஜம்மு,
இதில் ஒரு இந்திய ராணுவ வீரர் படுகாயம் அடைந்தார். சிறிது நேரத்தில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பாரமுல்லா மாவட்டத்தில் உரி செக்டார் பகுதியில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ஒரு இந்திய வீரர் காயம் அடைந்தார். அன்றைய தினமே ரஜோரி மாவட்டம் நவுஷெரா செக்டாரில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியது. 2016–ம் ஆண்டு ஆகஸ்டு 1–ந் தேதி வரை 285 முறையும், இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 228 முறையும் பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி தாக்குதலில் ஈடுபட்டு இருப்பதாக இந்திய ராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story