ஒடிசா, மேற்கு வங்காளத்தின் வெற்றியே எங்களை 300 தொகுதிகளை அடைய செய்யும் - பா.ஜனதா


ஒடிசா, மேற்கு வங்காளத்தின் வெற்றியே எங்களை 300 தொகுதிகளை அடைய செய்யும் - பா.ஜனதா
x
தினத்தந்தி 19 May 2019 10:40 AM GMT (Updated: 19 May 2019 11:57 AM GMT)

ஒடிசா, மேற்கு வங்காளத்தில் காணப்படும் நிலவரமே பா.ஜனதாவை 300 தொகுதிகளை அடைய செய்யும் என பா.ஜனதா பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வார்கியா கூறியுள்ளார்.

நாட்டில் அதிகம் தொகுதிகள் கொண்ட உ.பி.யில் இருபெரும் மாநில கட்சிகளான சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்துள்ளது. எனவே கடந்த முறை மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 72 தொகுதிகளில் வென்றது போன்று இம்முறை பா.ஜனதா அதிகமான தொகுதிகளை வெல்ல வாய்ப்பு குறைவாகவே தென்படுகிறது. எனவே கிழக்கு மாநிலங்களான ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா அதிகமாக கவனம் செலுத்தியது.

தேர்தல் பிரசாரம் முடிந்ததும் பா.ஜனதா கூட்டணி 300 தொகுதிகளில் வெற்றியடையும், மக்கள் என்னை மீண்டும் பிரதமராக்க விரும்புகிறார்கள் என பிரதமர் மோடி கூறினார்.

இந்நிலையில் பா.ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய் வார்கியா பேசுகையில், பா.ஜனதா 300 தொகுதிகள் வரையில் வெற்றிப்பெறும் என்று நான் பார்க்கிறேன், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களில் பெரும் வெற்றியை எங்களுடையதாக்க உள்ளதால் இந்த எண்ணிக்கையை நாங்கள் தொட உள்ளோம் எனக் கூறியுள்ளார். மத்திய பிரதேசத்தில் உள்ள 29 தொகுதிகளில் காங்கிரஸ் 22 தொகுதிகளில் வெல்லும் என கமல்நாத் கூறியதை நிராகரித்துள்ள வார்கியா, காங்கிரஸ் தலைமை மாநிலத்தில் முதல்வரைதான் மாற்ற வேண்டியது வரும் என கேலி செய்துள்ளார். 

Next Story