ஜம்மு-காஷ்மீரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு


ஜம்மு-காஷ்மீரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Jun 2019 11:01 PM IST (Updated: 4 Jun 2019 11:01 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு-காஷ்மீரில் இந்த ஆண்டு (2019) இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி-பா.ஜனதா கூட்டணி ஆட்சி  நடைபெற்று வந்தது. இரு கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக பா.ஜனதா தனது ஆதரவை கடந்த ஆண்டு விலக்கிக் கொண்டது. இதையடுத்து, மெகபூபா முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகினார். அதைத்தொடர்ந்து,  மாநில சட்டசபை முடக்கப்பட்டு 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் ஆளுநர் ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், காஷ்மீரில் இந்த ஆண்டு (2019) இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அமர்நாத் யாத்திரை முடிந்த பிறகு தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

Next Story