காஷ்மீரில் விரைவில் உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் அதிகாரியிடம் கவர்னர் வலியுறுத்தல்


காஷ்மீரில் விரைவில் உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் அதிகாரியிடம் கவர்னர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Aug 2019 3:14 AM IST (Updated: 11 Aug 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் அதிகாரியிடம் கவர்னர் வலியுறுத்தி உள்ளார்.

ஜம்மு,

காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருக்கும் நிலையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரி சைலேந்திர குமார் நேற்று கவர்னர் சத்யபால் மாலிக்கை சந்தித்து பேசினார். அப்போது மாநிலத்தில் வட்டார வளர்ச்சிக்குழுக்களுக்கு (உள்ளாட்சி) தேர்தல் நடத்தும் பணிகளை துரிதப்படுத்துமாறு சைலேந்திர குமாரிடம் கவர்னர் வலியுறுத்தினார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பாக சமீபத்தில் தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, அங்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார். இதை சுட்டிக்காட்டிய சத்யபால் மாலிக், மாநிலத்தில் அடிமட்டத்தில் இருந்தே ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என கூறினார்.

அப்போது அவரிடம், வட்டார வளர்ச்சிக்குழு தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சைலேந்திர குமார் எடுத்துரைத்தார். காஷ்மீரில் வட்டாரக்குழுக்களுக்கு தேர்தல் நடத்துவது என கடந்த மார்ச் 9-ந் தேதியே மாநில நிர்வாகம் முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story