காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தான் - சீனா ஆலோசனை


காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தான் - சீனா ஆலோசனை
x
தினத்தந்தி 9 Sept 2019 6:41 AM IST (Updated: 9 Sept 2019 6:41 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா பாகிஸ்தானுடன் ஆலோசனை நடத்தியது.

பெய்ஜிங்,

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு  கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்தது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச  பிரச்சினையாக்க முயற்சித்த பாகிஸ்தான், அதில் தோல்வி அடைந்தது. சீனா மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அவ்வப்போது கருத்துக்களை வெளியிட்டு வருகிறது. 

இந்த நிலையில்,  சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி,  2 நாட்கள் சுற்றுப்பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். நேற்றுடன்  அவரது பாகிஸ்தான் சுற்றுப்பயணம் முடிந்த நிலையில், பாகிஸ்தான் சீனா இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டது. அதில், ”பாகிஸ்தானின் இறையாண்மை, ஒருமைப்பாடு, சுதந்திரம் மற்றும் தேசிய கண்ணியத்தை பாதுகாப்பதில் சீனா ஆதரவு அளிக்கும்.  

பிரச்சினைகளை இருநாடுகளும் (இந்தியாவும் பாகிஸ்தானும்) தீர்த்துக்கொள்வது அவசியம். பரஸ்பர மரியாதை மற்றும் சமத்துவத்துடன் இருநாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தங்கள் பிரச்சினைகலை தீர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு தலைபட்சமாக எந்த ஒரு முடிவையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. அவ்வாறு செய்தால் நிலமை மோசமாகி விடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story