டெல்லியில் காற்று மாசு: பஞ்சாபில் வயல்வெளியில் சருகுகளை எரித்த விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு


டெல்லியில் காற்று மாசு: பஞ்சாபில் வயல்வெளியில் சருகுகளை எரித்த விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு
x
தினத்தந்தி 3 Nov 2019 1:02 PM GMT (Updated: 3 Nov 2019 1:02 PM GMT)

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு எதிரொலியாக பஞ்சாபில் வயல்வெளியில் சருகுகளை எரித்த விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு

புதுடெல்லி,

டெல்லியில் இதுவரை இல்லாத அளவு இந்த ஆண்டு மிக மோசமான காற்று மாசு ஏற்பட்டுள்ளது. டெல்லியை சுற்றியுள்ள உத்தர பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லைப்புற பகுதி விவசாயிகள் தங்கள் நிலத்தில் அறுவடைக்கு பிறகு காய்ந்த சருகுகளை எரிப்பதால் பெருமளவு காற்று மாசு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விவசாயிகள் நிலத்தில் சருகுகளை எரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாபில் வயல்வெளிகளில் காய்ந்த சருகுகளை எரித்ததாக 2,923 விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசு குறியீடு உச்ச அளவை தொட்டுள்ளது. இதனை கட்டுப்ப்டுத்த டெல்லி அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லி மற்றும் என்சிஆர் மண்டலத்தில் வரும் 5 ஆம் தேதி வரை கட்டிடப்பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Next Story