ஹரித்துவாரில் கார் கவிழ்ந்து பா.ஜனதா எம்.பி. காயம்


ஹரித்துவாரில் கார் கவிழ்ந்து பா.ஜனதா எம்.பி. காயம்
x
தினத்தந்தி 10 Nov 2019 12:31 PM IST (Updated: 11 Nov 2019 1:35 AM IST)
t-max-icont-min-icon

ஹரித்துவாரில் கார் கவிழ்ந்து பா.ஜனதா எம்.பி. காயமடைந்தார்.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் பாவ்ரி தொகுதி பா.ஜனதா எம்.பி. திராத்சிங் ராவத் நேற்று காரில் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தார். ஹரித்துவார் மாவட்டம் பிம்காவ்டா என்ற இடத்தில் கார் சென்றபோது எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதுவதை தவிர்க்க முயற்சித்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கவிழ்ந்தது.

இதில் ராவத் எம்.பி., அவரது பாதுகாவலர், டிரைவர் ஆகியோர் காயம் அடைந்தனர். ராவத் முதலில் ஹரித்துவார் ஆஸ்பத்திரியிலும், பின்னர் மேல்சிகிச்சைக்காக எய்ம்ஸ் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story