ஓவைசி போன்றவர்களுக்காகத்தான் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது ; மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்


ஓவைசி போன்றவர்களுக்காகத்தான் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது ; மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
x
தினத்தந்தி 4 Feb 2020 10:20 AM IST (Updated: 4 Feb 2020 10:20 AM IST)
t-max-icont-min-icon

ஓவைசி போன்றவர்களுக்காகத்தான் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது என்று மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி,

ஜாமியா மில்லியா, அலிகார் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் நாட்டுக்கு எதிராக ஓவைசி போன்றோர் விஷத்தை பரப்புவதாக பாஜக தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான கிரிராஜ்சிங் கூறியுள்ளார். 

கிரிராஜ்சிங் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது ;- “ ஓவைஸியைப் போன்றவர்கள் ஜாமியா மில்லியா மற்றும் அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகங்கள் போன்ற கல்வி நிறுவனங்களில் நாட்டுக்கு எதிராக விஷத்தை பரப்புகின்றனர். 

ஓவைசி மற்றும் அவரைப் போன்ற அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானவர்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்தியர்கள் தற்போது விழித்துவிட்டனர். எங்களை தாழ்த்தவோ பிரிக்கவோ முயற்சிக்காதீர்கள். பாகிஸ்தான் போன்ற நாடுகள் உங்களுக்காகத்தான் உருவாக்கப்பட்டுள்ளன. எங்களை அமைதியாக வாழவிடுங்கள்”என்று தெரிவித்துள்ளார்.
1 More update

Next Story